நியூயார்க்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும், இளைஞர்களும் தங்களது கல்வியை தொடர மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தகவல் சாதனங்கள் மூலம் தொலைநிலை கற்றல் தளத்தை உருவாக்கியுள்ளது யுனிசெப் அமைப்பு.
அந்த தளத்தின் பெயர் ‘லேர்ணிங் பாஸ்போர்ட்’ (LEARNING PASSPORT) என்று அழைக்கப்படுகிறது. இதை 18 மாதங்களாக பயிற்சி அடிப்படையில் பரிசோதித்து வந்த யுனிசெப் அமைப்பு, தற்போதுள்ள அவசர கார சூழலில் உலக மக்களுக்கு இது உதவும் என்று அதனை விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.