விண்வெளி ஆராய்ச்சியில் கொடிக்கட்டி பறந்துகொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திவருகிறது. பல வகையான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், நேற்றிரவு (ஜனவரி 24) புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி மையத்திலிருந்து பால்கன்-9 ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. அரசு தொடர்பான மற்றும் வணிகரீதியாக செலுத்தப்பட்ட 143 செயற்கைக்கோள்களில் 48 எர்த்-இமேஜிங் செயற்கைக்கோள்கள் (Earth-imaging satellites), 17 சிறிய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்,3 0 சிறிய செயற்கைக் கோள்கள உள்ளன.