தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

மோசமான வானிலை: ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள் ஏவும் பணி ஒத்திவைப்பு! - ஸ்டார்லிங்க் திட்டம்

வாஷிங்டன்: மோசமான வானிலை காரணமாக நேற்றிரவு திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக்கோள் ஏவும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

spacex
spacex

By

Published : Aug 31, 2020, 9:07 AM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

இதுகுறித்து அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகையில், "ஸ்டார்லிங்க் திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் நேற்றிரவு (ஆக.30) விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில நாள்களாக ஏற்பட்டுவரும் மோசமான வானிலை காரணமாக, அப்பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதனால் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி காலை 9:29 மணிக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் திட்டமிட்டப்படி விண்ணில் ஏவப்படும்" எனத் தெரிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். அதன் ஸ்டார்லிங்க் திட்டம் என்பது அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் வலையமைப்பாகும்.

இந்தத் திட்டம் பிப்ரவரி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் மொத்தமாக 12 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு 10 பில்லியன்(ரூ.1000 கோடி) அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஸ்பேஸ் எக்ஸ்: விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு, நீரில் தரையிறங்கிய விண்கலம்!

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details