தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

சூரியனை நெருங்கும் செவ்வாய்! 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்! - Mars will be closest to Sun

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ. ஆகும். இதில் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும். இந்த நிகழ்வின் மையத்தை அக்டோபர் 14 ஆம் தேதி வானில் தெளிவாகக் காணலாம்.

Mars will be closest to Sun
Mars will be closest to Sun

By

Published : Oct 8, 2020, 3:51 PM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

வாஷிங்டன்:செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அக்டோபர் 6ஆம் தேதி அடைந்தது.

அதாவது, பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ. ஆகும். இதில் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும்.

அக்டோபர் 14ஆம் தேதி பிற்பகல் 2.56 மணிக்கு செவ்வாய் கிரகமும், சூரியனும் ஒன்றுக்கொன்று எதிர்எதிரே காணப்படும் என்றும், நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது, செவ்வாயும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும் எனவும் ஸ்கை & டெலஸ்கோப் வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

'என்-95ஐ விட தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் உருவாக்கும் ஐஐடி மாணவர்கள்!'

எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது, பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது, செவ்வாய் கிரகம் பெரிதாகவும், பிரகாசமாகவும், நெருக்கமாகவும் தெரியும்.

இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால், இம்மாத இறுதிவரை காணலாம். ஏனென்றால், நாட்கள் ஆக ஆக தூரம் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் குறையும்.

பொதுமக்கள் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இப்படி பார்க்கலாம்.

அழைப்புகளில் காத்திருக்க தேவையில்லை; உங்களுக்காக காத்திருக்கும் கூகுள்!

நள்ளிரவு நேரமாக இருந்தால், நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில், மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது, ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details