தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 5:46 AM IST

Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ETV Bharat / science-and-technology

ஈர ஆடைகளிலிருந்து மின்சாரம்; விருது வென்ற கோரக்பூர் ஐஐடி மாணவர்கள்!

ஈர ஆடைகளிலிருந்து மின்சார உற்பத்தி செய்ய முடியும் என்ற தொழிற்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக கோரக்பூர் ஐஐடி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

iit-kharagpur-researchers-generate-power-from-wet-clothes-awarded
iit-kharagpur-researchers-generate-power-from-wet-clothes-awarded

சமூகத்திற்கான ஆராய்ச்சி மற்றும் நிலையான தொழிற்நுட்பங்களுக்கான முன்மாதிரி சங்கம் சார்பில் காந்தியன் இளம் தொழிற்நுட்ப கண்டுபிடிப்புக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வ அமைப்பான எஸ்ஆர்ஐஎஸ்டிஐ (SRISTI) பொறியியல், அறிவியல், தொழிற்நுட்பம், டிசைன் ஆகியவற்றின் மூலம் கண்டுபிடிக்கப்படும் தொழிற்நுட்பங்களுக்கு விருது வழங்கும்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான காந்தியன் இளம் தொழிற்நுட்ப கண்டுபிடிப்புக்கான விருதினை கோரக்பூர் ஐடிடி மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த கல்லூரியின் மெக்கானில் துறை சார்பாக, '' ஈரமான ஆடைகளிலிருந்து மின்சார உற்பத்தி'' செய்ய முடியும் என்று கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே கல்லூரியின் மற்றொரு துறையைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்த, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய மின்னணு சாதனங்களில் ஆற்றம் பாதுகாப்பு மற்றும் வெப்ப மேலாண்மை ஆகிய பிரச்னையை எதிர்கொள்ள கண்டுபிடித்த தொழிற்நுட்பத்திற்காக இன்னொரு விருதும் வழங்கப்பட்டது.

இதனிடையே ஈரமான ஆடைகளிலிருந்து மின்சார உற்பத்தி செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் கிராமத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது 50 சட்டைகள் துவைத்து தொங்கவிடப்பட்ட நிலையில், ஆடைகள் அனைத்தையும் சூப்பர் கெபாசிட்டர் மூலம் இணைக்கப்பட்டது. இதன்மூலம் 10 வோல்ட் மின்சாரம் வெளியேற்றப்பட்டது. இதனால் எல்ஈடி மின்விளக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக எரிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டிக்டாக் செயலியை கையகப்படுத்தும் மைக்ரோசாஃப்ட்!

Last Updated : Feb 16, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details