புவனேஸ்வர் (ஒடிசா):சுவேந்து பட்நாயக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய நேரப்படி இன்று (ஆக.02) காலை 11.30 மணியளவில், பூமியும், சனி கோளும் தங்களுடைய சுற்றுப்பாதையில் மிகக் நெருக்கமாக வரப்போகின்றன.
பூமிக்கு சூரியனைச் சுற்றி வர 365 நாள்களாகின்றன. அதேபோல, சூரியக் குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளான சனி சூரியனைச் சுற்றி வர 29.5 ஆண்டுகளாகின்றன. இந்த இரண்டு கோள்களும் ஆண்டுக்கு ஒருமுறை நெருக்கமாக வருகின்றன. அந்த வேளையில் மக்கள் சனி கோளை கண்களால் பார்க்க முடியும். கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி இரண்டு கோள்களும் நெருங்கின.