தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

QYNDR Vaccine: வாய்வழி கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் தீவிரம் - மூக்கின் வழியே செலுத்தும் கரோனா மருந்து

கரோனா தடுப்பு மருந்தை ஊசி மற்றும் மூக்கின் வழியே செலுத்துவதற்கு பதிலாக வாய்வழியாக குடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாய்வழி கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி தீவிரம்
வாய்வழி கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி தீவிரம்

By

Published : Jan 24, 2023, 11:14 AM IST

Updated : Jan 24, 2023, 11:28 AM IST

சான் பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும் கரோனா தடுப்பு மருந்து ஊசிகள் மூலம் செலுத்தப்பட்டுவந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் வழியே செலுத்தப்படும் இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்பானது மற்றும் மிகுந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டதால் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த தடுப்பு மருந்து அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்தின் வருகையை தொடர்ந்து ஊசி மற்றும் மூக்கின் வழியே கரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு பதிலாக டானிக் போல குடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கரோனா மருந்தின் பயன்பாட்டை எளிதில் அதிகரிக்க முடியும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் நம்புகின்றன. இந்த வகை தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள US Specialty Formulation என்னும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வாய்வழி கரோனா தடுப்பு மருந்துக்கு QYNDR அதாவது கியூண்டர் எனப் பெரியரிடப்பட்டுள்ளது.

இந்த கியூண்டர் தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனையை முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்த பரிசோதனைகளும் முழு வீச்சில் நடந்துவருகிறது. இந்த பணிகள் முடிந்த உடன் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து US Specialty Formulation நிறுவனர் கைல் ஃபிளானிகன் கூறுகையில், இப்போது புழக்கத்தில் இருக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை விட QYNDR மருந்து பாதுகாப்பானதாகவும், மிக எளிமையாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். சொல்லப்போனால், மனிதனின் செரிமான அமைப்பில் மருந்தின் செயல்பாடு மிகவும் சவாலானது.

இருப்பினும், வயிற்றைக் கடந்து குடலுக்குள் மருந்து செல்லும்போது, உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். அதற்கேற்ப QYNDR மருந்தை தயாரித்துவருகிறோம். கரோனா மற்றும் பூஸ்டர் போன்ற தடுப்பூசிகள் போலல்லாமல் வாய்வழி தடுப்பு மருந்துகள் கடுமையான பாதிப்புகள் மற்றும் மரணத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், முன்னகூட்டியே தொற்றுநோய்களைத் தடுக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Nasal Vaccine: நாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம்

Last Updated : Jan 24, 2023, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details