சான் பிரான்சிஸ்கோ: இதுதொடர்பாக ட்விட்டர் சேஃப்டி (Twitter Safety) என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முக்கியமான விவகாரங்களில் விளம்பரங்களின் பங்கு பொதுக்களின் உரையாடல்களை எளிதாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில் அமெரிக்காவில் விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்களுக்காக எங்களது விளம்பரக் கொள்கையைத் தளர்த்து உள்ளோம்.
ETV Bharat / science-and-technology
ட்விட்டரில் விரைவில் அரசியல் விளம்பரங்கள்
ட்விட்டரில் வரும் வாரங்களில் இருந்து அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அனுமதிக்கும் அரசியல் விளம்பரங்கள் வரும் வாரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த விளம்பரங்கள் டிவி மற்றும் பிற ஊடகங்களின் கொள்கையுடன் பொருந்தும். அதேபோல எல்லா ஊடக கொள்கைகளை போலவே, உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் அனுமதிப்பதற்கும் எங்கள் அணுகுமுறை பயனர்களை பாதுகாக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அரசியல் விளம்பரங்களுக்கு ட்விட்டர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Online Gaming: போலீஸாரை ரம்மி விளையாடச்சொல்லும் சிபிசிஐடியினர் - சுவாரஸ்யப் பின்னணி