தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

தீபாவளிக்கு மறுநாள் சூரிய கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கக் கூடாது... மக்களுக்கு எச்சரிக்கை... - பகுதி நேர சூரிய கிரகணம்

வரும் அக்டோபர் 25ஆம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும் இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் மக்கள் பார்க்கக் கூடாது என்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Partial Eclipse of the Sun should not be viewed with the Naked Eye
Partial Eclipse of the Sun should not be viewed with the Naked Eye

By

Published : Oct 19, 2022, 8:27 AM IST

டெல்லி:இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பகுதி நேர சூரிய கிரகணம் 2022 அக்டோபர் 25ஆம் தேதி (1944 சக ஆண்டு கார்த்திகை மாதம் 3-ஆம் நாள்) நிகழும். இந்தியாவில் சூரிய கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு முன் தொடங்கி பெரும்பாலான இடங்களில் காட்சியளிக்கும். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.

கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். நாட்டின் பிற பகுதிகளில் இது குறைவாகவே காணப்படும்.கிரகணத்தின் உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா நாடுகள், வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் தென்படும். தமிழ்நாட்டின் சென்னையில் மாலை 5.14 மணி முதல் 5.45 மணி வரை 30 நிமிடங்கள் நிகழும், மதுரையில் மாலை 5.24 மணி முதல் 5.53 மணி வரை 31 நிமிடங்கள் வரை நிகழும். இந்த கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியனின் பெரும்பகுதியை சந்திரன் மறைத்தாலும் அது கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அலுமினிய மைலார், பிளாக் பாலிமர், வெல்டிங் கிளாஸ் எண் 14 உள்ளிட்ட கண்ணாடிகள் மூலமும், தொலைநோக்கிகள் மூலமும் மட்டுமே கிரகணத்தைப் பார்ப்பது பாதுகாப்பான செயலாகும்.

அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும்போதும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் நிழல் சூரியனை ஓரளவு மறைக்கும் போது பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இதையும் படிங்க:நெட்ப்ளிக்ஸிலும் வரப்போகுது விளம்பரம்

ABOUT THE AUTHOR

...view details