தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

ரோபோட் வரைந்த டிஜிட்டல் ஆர்ட் ரூ.5 கோடிக்கு விற்பனை! - Humanoid robot Sophia

பெய்ஜிங்: ஹூமானாய்டு ரோபோ சோபியா வரைந்த டிஜிட்டல் ஆர்ட், இணையத்தில் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனையாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Humanoid robot Sophia
ரோபோட்

By

Published : Mar 30, 2021, 6:14 PM IST

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஹான்சன் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஹூமானாய்டு ரோபோ சோபியா, தன்னுடைய சுய உருவப்படத்தை டிஜிட்டலாக வரைந்து ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 888 டாலருக்கு (இந்திய மதிப்பில் 5 கோடியே 6 லட்சம் ரூபாய்) ஆன்லைனில் விற்பனை செய்து பிரமிக்கவைத்துள்ளது.

கிரிப்டோ ஆர்ட் பிளாட்பார்மான நிஃப்டி கேட்வே வழியாக இந்த விற்பனை நடைபெற்றுள்ளது. இத்தாலிய டிஜிட்டல் கலைஞரான ஆண்ட்ரியா பொனாசெட்டோவுடன் இணைந்து சோபியா இன்ஸ்டாண்டியேஷன் என்ற கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது.

அவர் வரைந்த படத்தை, சோபியா தனது AI திறனால், 12 நொடிகளில் டிஜிட்டலாக மாற்றியுள்ளது. இந்தக் காணொலியும் விற்பனையின்போது வெளியிடப்பட்டது.

உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட மனித ரோபோக்களில் சோபியாவும் ஒன்று. 2016இல் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலிடம் நேர்காணல் நடத்தியது மட்டுமின்றி நியூயார்க் பேஷன் ஷோவிலும் கலந்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிளேஸ்டேஷன் 3 சாதனத்தை நிறுத்தப்போகிறதா சோனி - அதிர்ச்சியில் கேமர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details