பேஸ்புக்கில் கிளவுட் ஸ்ட்ரீமிங் மூலம் கிரேட்டா தளத்தை நாம் பயன்படுத்தலாம். இதற்கு முன்பு வரை கிரேட்டாவை எபிக் கேம்ஸிலும் , கூகுள் ஸ்டேடியாவில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. பேஸ்புக்கின் இந்த அறிவிப்பால் கிரேட்டா தளத்தில் இனி இலவசமாக கேம் விளையாடலாம்.
இதற்கு நம்மிடம் பேஸ்புக் கணக்கு இருந்தால் போதும். இதன் மூலம் நமக்கு ஒரு உருவாக்க கருவி கிடைக்கும், அது கேம் உருவாக்கத்தை எளிதாக்கும். நமக்கு பிடித்தது போல் கேம்களில் வீரர்களை உருவாக்கம் செய்து , பகிர்ந்து நண்பர்களுடன் விளையாடலாம்.
முதலில் உருவாக்க கருவித்தொகுப்பைக் கிரேட்டா கொடுக்கும் மற்றும் கேம் உருவாக்கத்தை இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றும். பேஸ்புக்கில் கிரேட்டா அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் , இனி கேம்களை விளையாடுவோர் கூகுள் ஸ்டேடியா சந்தாவை பெற வேண்டிய அவசியமில்லை. அதே போல கேம்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, நேரடியாகவே கேம்களை விளையாடலாம்..
பேஸ்புக்கின் இந்த முயற்சி 2k கிட்ஸை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பேஸ்புக்கில் விளையாட்டு தொழில்நுட்பம் இதையும் படிங்க: உடல் அசைவுகளை மின் ஆற்றலாக மாற்றும் பிரத்யேகத் துணி!