வாஷிங்டன்: ஒன்றுக்கு மேலான செல்போன்களில் ஒரே வாட்ஸ்அப் எண்னை வைத்து பயன்படுத்தும் புதிய வசதியை பயன்பாட்டாளர்களுக்கு கூடிய விரைவில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. ‘கம்பானியன் மோட்’(Companion mode) எனப்படும் இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் செயலியின் பயன்பாட்டாளர்கள் இனி தங்களின் வாட்ஸ்அப்(Whatsapp) முகப்பை ஒன்றுக்கு மேலான செல்போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் நான்கு ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரு வாட்ஸ்அப் முகப்பை இந்த புதிய அப்டேட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது இந்த அப்டேட் பீட்டா பயன்பாட்டாளர்கள் (Beta Users) மத்தியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'QR code' மூலம் பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பயன்பாட்டாளர்கள் தங்களது வாட்ஸ்அப் முகப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.