வாஷிங்டன்:இதுகுறித்துஅமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஜனவரி 18ஆம் தேதி ஒரு கி.மீ. விட்டம் உள்ள ராட்சத விண்கல் பூமியைக் கடந்து செல்ல உள்ளது.
இந்தக்கல் பூமியிலிருந்து 19 லட்சம் கி.மீ. தொலைவில் கடக்க உள்ளது. இந்த இடைவெளியானது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தை விட 5.15 மடங்கு அதிகம். மணிக்கு 70 ஆயிரம் கி.மீ. கடந்து செல்லும்.