நாசா சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் (perseverance rover), தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக இன்று (மார்ச்.6) முடித்துள்ளது. இச்சோதனை செவ்வாய் நிலப்பரப்பில் சுமார் 6.5 மீட்டர் தூரத்தில் நடைபெற்றது. சுமார் 33 நிமிடங்கள் நடந்த சோதனையில், ரோவர் நான்கு மீட்டர் முன்னோக்கி நகர்ந்துள்ளது.
அதே போல, ரோவரை இடதுபுறம் 150 டிகிரிக்கு திருப்பி, புதிய இடத்தில் தற்காலிகமாக மையம் கொண்டுள்ளது. இந்த இடத்தை ஆக்டேவியா ஈ. பட்லர் லேண்டிங் (Octavia E. Butler Landing) எனக் குறிப்பிடுகின்றனர். நாசாவின் கூற்றுப்படி, ரோவரின் ஒவ்வொரு சாதனங்களையும் சரிபார்க்கவே இச்சோதனை நடத்தப்பட்டது. விரைவில், ரோவர் தனது பணியை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.