வாஷிங்டன்: நமது சூரிய குடும்பம் கேலக்டிக் மையத்திலிருந்து சுமார் 27,000 ஒளியாண்டுகள் சுற்றளவில் நட்சத்திரங்கள், கோள்கள், கருந்துளைகள், விண்கற்கள், வாயுகள், தூசிக்களான ஓரியன் கையின்(சுருள் வடிவம்) உள் விளிம்பில் அமைந்துள்ளது.
இதனை பால்வழி அண்டம் என்று பொதுவாகவும், சுருள் வழி அண்டம் என்று குறிப்பாகவும் அழைக்கின்றோம். இந்த அண்டத்தில் 100 முதல் 400 கோடி சூரிய குடும்பங்கள் உள்ளதாகவும், அதனை சுற்றி லட்ச கோடிக்கணக்கான கோள்கள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த ஆராய்ச்சிகளில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு புதியக் கோள்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில், வாஷிங்டனில் உள்ள பெல்லூவைச் சேர்ந்த டாம் ஜேக்கப்ஸ் என்பவர் பூமியிலிருந்து சுமார் 379 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மாபெரும் வாயுக் கோளை கண்டுபிடித்துள்ளார்.
இவர் 2010ஆம் ஆண்டு முதல் நாசாவின் தன்னார்வள விஞ்ஞானியாக உள்ளார். அண்டவியல் பயின்ற விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் "குடிமகன் விஞ்ஞானிகள்" என்ற அந்தஸ்தை அளித்து, தனது தரவுகள் மூலம் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கோள்களை பற்ற ஆராய ஊக்கம் அளிக்கிறது.
இவர்கள் தன்னார்வள விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது, புதிய கோள்களையும் கண்டுபிடிக்கின்றனர். அப்படி, டாம் ஜேக்கப்ஸ் கண்டுபிடித்த புதிய வாயுக்கோளானது, நமது சூரியனைப் போன்றதொரு பெரும் கோளை சுற்றிவருகிறது. இதற்கு TOI-2180 என்று பெயரிடப்பட்டுள்ளது.