தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

புதிய பிங் பிரௌசரை அறிமுகம் செய்த மைக்ரோசாஃப்ட்! - அதிக திறன் கொண்ட பிங் பிரௌசர்

ChatGPT-ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் புதிய பிங் பிரௌசரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிங் பிரௌசர்
பிங் பிரௌசர்

By

Published : Feb 8, 2023, 6:11 PM IST

சான் பிரான்சிஸ்கோ:தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், எளிய மற்றும் நவீன வசதிகளை பயனர்கள் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு OpenAI நிறுவனம், சாட்ஜிபிடி(chatGPT) எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்தது.

பயனர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, குறுகிய காலத்தில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதற்குப் பதிலடியாக, உரையாடல் நிகழ்த்தும் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக ஓபன் ஏஐ (OpenAI) தொழில்நுட்ப அடிப்படையில், புதிய பிங் பரௌசரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, ''சாட் ஜிபிடியை விட, பிங் பிரௌசர் அதிக திறன் கொண்டது. இதன் முன்னோட்டத்தை (preview) Bing.com-ல் காண முடியும். பயனாளர்கள் விரிவான தேடல், முழுமயான பதில்கள், புதிய உரையாடல் அனுபவம் ஆகியவற்றைப் பெற முடியும். சாட் ஜபிடியை விட பிங் பிரௌசர் வேகமானது மற்றும் துல்லியமானது" என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிங் மற்றும் எட்ஜ் என்ற இரண்டு பிரௌசர்களை வைத்துள்ளது. இதன் நீட்சியாகவே பிங் பிரௌசர் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் இனி "வாய்ஸ் ஸ்டேட்டஸ்" வைக்கலாம்...!

ABOUT THE AUTHOR

...view details