சான் பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம்களை 2023ஆம் ஆண்டு முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்தது. அதோடு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் உள்ள குரோம் பிரவுசர் பயன்பாடும் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எட்ஜ் பிரவுசர் பயன்பாட்டையும் நிறுத்த உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ETV Bharat / science-and-technology
விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்களுக்கு காலக்கெடு - விண்டோஸ் 7 மற்றும் 8 சேவை நிறுத்தம்
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 இரண்டிலும் எட்ஜ் பிரவுசர் பயன்பாட்டை நிறுத்த உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எட்ஜ் பிரவுசர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். அதன்பின் எந்தவொரு அப்டேட்களையும் செய்ய முடியாது. பயர்போக்ஸ் பிரவுசர் பயன்பாடு தொடர வாய்ப்புள்ளது. இதனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8/8.1 பயனர்கள் முன்கூட்டியே அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்களுக்கு மாறிவிடுவது நல்லது. இல்லையென்றால், எட்ஜ், குரோம் பிரவுசர்கள் மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இதர செயலிகளிலும் எவ்வித அப்டேட்களையும் செய்யமுடியாது. குறிப்பாக பயன்பாடுகள் புதிய ஜெனரேசனுக்கு ஏற்றால் போல இருக்காது.
இதையும் படிங்க:இந்தியாவில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்கக்கூடும்: விஞ்ஞானிகள் கணிப்பு