வின்செஸ்டர் (அமெரிக்கா):நுகர்வோர் தகவல் சாதன நிகழ்வில் கொரிய நிறுவனமான சாம்சங்கின் புதிய கேலக்ஸி குரோம்புக் 2 மடிக்கணினி, மெர்குரி சாம்பல், ஃபீஸ்டா சிவப்பு ஆகிய நிறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி!
சாம்சங் கேலக்ஸி குரோம்புக் 2 சிறப்பம்சங்கள்:
- 13.3 அங்குல முழு எச்டி+ (1920 x 1080 பிக்சல்கள்) தொடுதிரை / எச்டிஆர் ஆதரவுடன்
- இன்டெல் கோர் i3 செயல் திறன்
- 4 ஜிபி / 8 ஜிபி LPDDR 3 ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்புத் திறன்
- கூடுதல் சேமிப்பிற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
- 45.5Wh பேட்டரி
- ப்ளூடூத் 5.0
- யூ.எஸ்.பி டைப்-C / 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் அனுமதி
- வைஃபை 6 இணைப்பு
- ஸ்மார்ட் ஆம்ப் அம்சம் (இது சாதாரண ஆம்ப்ஸை விட 78% சத்தமாக ஒலியை வெளிக்கொணரும்)
- காணொலி அழைப்புகளுக்கு, எச்டி கேமரா
- விலை $550 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.40,000)