பட்ஜெட் லேப்டாப்களை தொடர்ந்து சந்தைகளில் அறிமுகப்படுத்துவதில் பெயர்பெற்ற லெனோவா நிறுவனம், கேமிங் லேப்டாப் சந்தையையும் ஆட்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ’லிஜியன் 5’ என்னும் புதிய கேமிங் லேப்டாப்பை, இந்தியாவில் லெனோவா அறிமுகப்படுத்தியுள்ளது.
ETV Bharat / science-and-technology
இந்தியாவில் அறிமுகமாகவுள்ள லெனோவாவின் புதிய கேமிங் லேப்டாப்! - டெக்னாலஜி
சிறந்த கேமிங் அனுபவத்தையும், லேட்டஸ்ட் கேம்களை விளையாடுகையில் தரமான காணொலி அனுபவத்தையும் வழங்கும் வகையிலும், நீண்ட பேட்டரி திறனுடனும் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லெனோவா
லெனோவா லிஜியன் 5 சிறப்பம்சங்கள் :
- 15.6 இன்ச் 1080 டிஸ்ப்ளே
- 120Hz refresh rate
- AMD Ryzen 5 4600H ப்ராசஸர்
- NVIDIA கிராஃபிக்ஸ்
- எடை - 2.3 கிராம்
- எட்டு மணி நேரம் நீடிக்கும் பேட்டரி வசதி
- வீடியோ கேம் விளையாடும்போது லேப் டாப் சூடாவதைத் தணிக்கும் வசதி
- கருப்பு நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப் டாப்பின் தொடக்க விலை ரூபாய் 75,990.
Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST