தமிழ்நாடு

tamil nadu

மி நோட்புக் 14ஐசி - தனித்துவமிக்க விலைக்கேற்ற தரம்!

By

Published : Jan 21, 2021, 1:37 AM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

சியோமி நிறுவனம் மி நோட்புக் 14ஐசி எனும் புதிய மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு வெளியிடப்பட்ட மடிக்கணினியிலிருந்து மாறுதலாக, வெப் கேமராவுடன் இந்த மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

tamil tech news, technology news in india, technology news in tamil, science and technology news in india, current technology news in india, tamil technology news, தொழில்நுட்பச் செய்திகள், latest tech news in tamil, upcoming tech gadgets, upcoming tech devices, Mi Notebook 14 IC features, Mi Notebook 14 IC, Mi Notebook 14 IC price, Mi Notebook 14 ic features, Mi Notebook 14 ic price, Mi Notebook 14 IC launch in india, Mi Notebook 14 ic price in india, mi india sale
மி நோட்புக் 14ஐசி

டெல்லி: சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய மி நோட்புக் 14ஐசி மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் சியோமி நிறுவனம் இந்தியாவில் மடிக்கணினி வணிகத்தில் போட்டி விலையில் மி நோட்புக் 14 மடிக்கணினியை அறிமுகம் செய்தது. நல்ல விலையில் சியோமி பல சிறந்த அம்சங்களை வழங்கிய போதிலும், மடிக்கணினியில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. மி நோட்புக் 14 இல் ஒரு வெப் கேமரா இல்லாமல் இருந்தது. இதை ஈடுசெய்ய நிறுவனம் இலவச யூ.எஸ்.பி வெப் கேமராவை வழங்கியது.

சியோமி மி நோட்புக் 14ஐசி என்ற புதிய மடிக்கணினியை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் இறுதியாக அந்த சிக்கலை சரிசெய்ததுள்ளது. இது இப்போது ஒருங்கிணைந்த வெப் கேமராவுடன் வருகிறது.

சியோமி மி நோட்புக் 14ஐசி சிறப்பம்சங்கள்

  • 14 அங்குல முழு அளவு எச்டி திரை (1920 x 1080p) தெளிவுத்திறனுடன்
  • 720பிக்சல் எச்டி வெப் கேமரா
  • 10ஆவது தலைமுறை இன்டெல் கோர் i5-10210U குவாட் கோர் செயலி
  • இன்டெல் UHD கிராபிக்ஸ்
  • 8 ஜிபி ரேம் / 256 ஜிபி அல்லது 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • இரண்டு யூ.எஸ்.பி-A 3.1 ஜென் 1 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி-A 2.0 போர்ட்
  • முழு அளவிலான HDMI போர்ட்
  • 3.5 மிமீ ஹெட்போன் ஜேக்
  • சார்ஜிங் பின்
  • 1.3 மிமீ கீகளுடன் கத்தரிக்கோல் பொறிமுறை கீபோர்டு
  • டூயல்-பேன்ட் வைஃபை (2.4GHz மற்றும் 5GHz)
  • புளூடூத் 5.0 ஐ
  • இரட்டை 2W ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது
  • 3660 mAh அல்லது 46Wh பேட்டரி மடிக்கணினியை இயக்குகிறது, இது 10 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கும் திறன் கொண்டது.

விலை

  1. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் UHD கிராபிக்ஸ் கார்டு கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 43,999
  2. 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இன்டெல் UHD கிராபிக்ஸ் கொண்ட மாடலின் விலை ரூ.46,999 ஆகும்
  3. மிக சக்திவாய்ந்த பதிப்பான 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் NVIDIA MX 250 2 ஜிபி GPU போன்றவற்றுடன் ரூ.49,999 விலையில் கிடைக்கிறது.
Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details