இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையுடன் ஒப்பிடுகையில், லேப்டாப் சந்தை மிகப் பெரிய அளவில் இல்லை. இருப்பினும், கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் லேப்டாப் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காலத்தை சரியாகப் பயன்படுத்தி, லேப்டாப் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்க பல்வேறு நிறுவனங்களும் முயன்று வருகின்றன.
சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்களும் புதிதாக லேப்டாப் சந்தையில் களமிறங்கின. மறுபுறம் ஹெச்.பி, Asus போன்ற நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை குறிவைத்து, தங்கள் புதிய லேப்டாப்களை வெளியிட தயாராகிவருகின்றன. இந்நிலையில், லெனோவா நிறுவனம் யோகா லெனோவா ஸ்லிம் 7i என்ற புதிய லேப்டாப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
லெனோவாஸ்லிம் 7i வசதிகள்
- 35.56 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- ஐ7 இன்டேல் பிராசஸர்
- Nvidia GeForce MX350 GDDR5 graphics card
- 512GB ஸ்டோரேஜ்
- 60W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
- 4.0W Dolby Atmos speaker
- எடை - 1.36 கிலோகிராம்