டெல்லி: ஆசஸ் நிறுவனம் தனது புதிய மடிக்கணினிகளை நுகர்வோர் தகவல் சாதன நிகழ்வு (CES 2021)இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு தகவல் சாதன சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும் நிறுவனம் ஆசஸ். கைப்பேசி, மடிக்கணினி ஆகியன நிறுவனத்தின் முக்கிய வர்த்தக படைப்புகள்.
தற்போது நடந்துவரும் நுகர்வோர் தகவல் சாதன நிகழ்வில் (CES 2021) தனது புதிய மடிக்கணினிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம். சென்புக் ப்ரோ டுயோ 15 ஒலெட் (UX582), சென்புக் டுயோ 14 (UX482), விவோபுக் எஸ்14 (S435), டஃப் டாஷ் எஃப்15 கேமிங் ஆகிய நான்கு மடிக்கணினிகள் இதில் அடங்கும்.
ஆசஸ் சென்புக் ப்ரோ டுயோ 15 ஒலெட் (UX582)
- 15” அங்குல 4கே ஒலெட் எச்டிஆர் தொடுதிரை + இரண்டாம் திரை
- இண்டெல் கோர் ஐ9 ப்ராசஸர்
- என்விடியா ஜிஃபோர்ஸ் RTX 3070 கிராபிக்ஸ்
- 1 டெரா பைட் எஸ்.எஸ்.டி சேமிப்புத் திறன்
- 32ஜிபி டிடிஆர் 4 ரேம்
- தண்டர்போல்ட் 4
- யூஎஸ்பி - சி அணுகல்
ஆசஸ் சென்புக் ப்ரோ டுயோ 15 ஒலெட் | நன்றி: ஆசஸ் ட்விட்டர்
ஆசஸ் சென்புக் டுயோ 14 (UX482)
- 14 அங்குல திரை
- 11ஆம் தலைமுறை இண்டெல் ஐ7 ப்ராசஸர்
- இண்டெல் ஐரிஸ் எக்ஸ்இ கிராஃபிக்ஸ்
- 16ஜிபி மெமரி
- மெல்லிய கட்டமைப்பு
ஆசஸ் சென்புக் டுயோ 14 (UX482) | நன்றி: ஆசஸ் ட்விட்டர்
இதேபோன்று கேமிங் பிரியர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட டஃப் டாஷ் எஃப்15 மடிக்கணினி, எந்த சிரமமும் இல்லாமல் விளையாடுவதற்காக 240 ஹெர்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் மூலம் விளையாடும்போது ஏற்படும் காட்சி தடங்கல் முற்றிலுமாக களையப்பட்டுள்ளதாக ஆசஸ் நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.
டஃப் டாஷ் எஃப்15 | நன்றி: ஆசஸ் ட்விட்டர்