ஆப்பில் ஐபோன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும்போது, அதிகமான ஷேக் மற்றும் பிளர் வருவதாகப் புகார்கள் எழுந்தன. அதிலும் வேறொரு செயலியின் பயன்பாட்டிற்காக, மொபைலில் உள்ள கேமராவைப் பயன்படுத்தும்போது இந்தப் பிரச்னைகள் அதிகமாக எழுந்துள்ளன.
குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும்போது ஆப்பிள் பயனர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 14 ப்ரோ (IPhone 14 Pro) மாடலில் இவை அனைத்தையும் சரிசெய்து நேர்த்தியான கேமராவை கொடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.