தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

90ஸ் கிட்ஸின் இணைய வாசலுக்கு மூடுவிழா!!

சுமார் 27 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த முக்கிய இணையதள உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் நாளை முதல் முற்றிலும் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

90ஸ் கிட்ஸின் இணைய வாசலுக்கு மூடுவிழா!!
90ஸ் கிட்ஸின் இணைய வாசலுக்கு மூடுவிழா!!

By

Published : Jun 14, 2022, 8:19 AM IST

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1995ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை இலவசமாக வழங்கத் தொடங்கியது. மூன்று தசாப்தங்கள் பழமையான இந்த உலாவி 2003ஆம் ஆண்டில் 95 சதவீத பயனாளிகளின் பங்கை அடைந்தது. பெரும்பாலான மக்களுக்கு, இணையதளத்துக்கான அறிமுகமாக ”இன்டர்நெட் எஸ்ப்ளோரர்” விளங்கியது. முக்கியமாக 90களில் பிறந்தவர்கள் இந்த உலாவியை மின்னஞ்சல் அனுப்பவும், வீடியோ கேம் விளையாடுவதற்காகவும் அதிகமாக பயன்படுத்தினர்.

காலப்போக்கில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இணையதளத்தின் வேகம் குறையத்தொடங்கியது மேலும் கூகுள் குரோம்(Google chrome), மொஸில்லா பயர்பாக்ஸ்(Mozilla Firefox) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைய வேகம் மற்றும் செயல்திறன் கொண்ட புதிய உலாவிகளை வெளியிட்டதால் அதன் பயனாளிகள் அதிகரிக்க தொடங்கினர்.

இதனையடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தாக்கம் குறைந்தது. இதற்கு மாற்றாக அதிக இணைய வேகம் கொண்ட ”மைக்ரோசாப்ட் எட்ஜ்” என்ற உலாவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாஃப்ட் எட்ஜில் பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்களையும் பயன்பாடுகளையும் நேரடியாகப் பார்க்க அனுமதிக்கிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வேலை செய்யாத இணையதளங்களுக்குச் செல்லும்போது, ”மைக்ரோசாப்ட் எட்ஜ்” உலாவியை விருப்பமானதாக வைக்க பயனாளிகளுக்கு ஒரு கோரிக்கை வரும்.

எனவே, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான பயனாளிகளின் சேவை நாளை (ஜூன் 15) முதல் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரீடிங் மாரத்தான் ' - தமிழக மாணவர்கள் உலக சாதனை

ABOUT THE AUTHOR

...view details