இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1995ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்களுக்கு, இணையதளத்துக்கான அறிமுகமாக ”இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்” விளங்கியது. காலப்போக்கில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இணையதளத்தின் வேகம் குறைய தொடங்கியதால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இன்று (ஜூன் 15) முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ETV Bharat / science-and-technology
விடைபெற்றது “இன்டர்நெட் எக்ஸ்புளோரர்”...!! - microsoft edge
சுமார் 27 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த முக்கிய இணையதள உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
விடைபெற்றது “இன்டர்நெட் எக்ஸ்புளோரர்”...!!
இதற்கு மாற்றாக அதிக இணைய வேகம் கொண்ட ”மைக்ரோசாப்ட் எட்ஜ்” என்ற உலாவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாஃப்ட் எட்ஜில் பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்களையும் பயன்பாடுகளையும் நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் தயாராகும் வங்கி பயன்பாட்டிற்கான மென்பொருள்: ஐஐடி இயக்குநர் தகவல்