இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக அதிகப்படியான எண்ணிக்கையில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்ட். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்தும்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் முன்னதாகத் தெரியவந்தது.
ஒன்றிய அரசு ஒப்புதல்
இந்நிலையில், கோவாக்ஸின் கோவிஷீல்ட் டோஸ்களை கலந்து உபயோகிப்பது குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அயோக் உறுப்பினர் மருத்துவர் வினோத் குமார் பால் தெரிவித்தார். மேலும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளின் கலவை குறித்த ஆய்வுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் 18 பேருக்கு இந்த கோவாக்சின் - கோவிஷீல்டு கலவை மருந்து செலுத்தப்பட்டு நல்ல முடிவுகள் எட்டப்பட்டன.