சான் பிராசிஸ்கோ: கூகுள் நிறுவனம், சிறிய திரையுடன் கூடிய புதிய பிக்சல் மினி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. கிஜ்மோசீனாவின் கூற்றுப்படி, இது 'நெய்லா' (Neila) என்ற பெயருடன் வெளியாகும் என அறியப்படுகிறது. இது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே (Punch-hole Display) மற்றும் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 வகைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆனால் இது பிக்சல் 7 போல் இருக்குமா என்பது சந்தேகத்தில் உள்ளதால், பிக்சல் 7 மினி என அழைக்கப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, வரவிருக்கும் கூகுள் தயாரிப்புகள் அனைத்தும் பொதுவாகவே கோட்பேஸில் அமைக்கப்படுகின்றன.