அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பாளரான டெஸ்லா, சூரியஒளி தகடுகளை மேம்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் தயாரித்து, வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது.
ETV Bharat / science-and-technology
அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனத் தயாரிப்பாளரான டெஸ்லா, சூரியஒளி தகடுகளை மேம்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் தயாரித்து, வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது.
அதன்படி டெஸ்லா பாட் பெயரில் முதல் ரோபோட்டை டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது.
இதுகுறித்த அறிவிப்பின்போது, ரோபோட் ஆடை அணிந்த நடிகர் ஒருவர் மேடையில் தோன்றினார். டெஸ்லா பாட் இப்படித்தான் காட்சியளிக்கும் என அதன் நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
டெஸ்லா பாட் ரோபோட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. டெஸ்லா பாட் 'ஆப்டிமஸ்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது. மின்சார கார்களின் தானியங்கி அம்சத்திற்கு பயன்படுத்தும் சிப், சென்சார்களையே டெஸ்லா தனது ரோபோட்டிலும் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.