சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சோனி அதன் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் வரிசையில் எண்ணற்ற மாடல்களை வெளியிட்டுள்ளது. இதுவரை 4ஜி தொழில்நுட்பத்தில் மட்டுமே வெளிவந்த எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் வரிசையில், முதன்முறை 5ஜி தொழில்நுட்பத்தில் எக்ஸ்பீரியா 1 II 5ஜி என்ற மாடலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடல் சோனி நிறுவனத்தின் முதல் 5ஜி தொழில்நுட்ப மாடலாகும்.
இந்த ஸ்மார்ட்போனில் 21:9 விகித உயர்தர 6.5 இன்ச் 4 கே ஹெச்.டி.ஆர். தொடுதிரை, டிரிபிள் லென்ஸ் அமைப்பு கொண்ட சோனியின் ஆல்பா கேமரா, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 5 ஜி SoC போன்ற பல அம்சங்கள் உள்ளன. ஆல்பா கேமரா என்பது உயர்தர டி.எஸ்.எல்.ஆர். லென்ஸ் தொழில்நுட்பம் கொண்டதால் இவ்வகை ஸ்மார்ட்போன் புகைப்பட பிரியர்களை எளிதில் கவரும் எனலாம்.