ஜெர்மன் நாட்டின் பிரபல மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான சென்ஹைசர், ஹெட்ஃபோன்கள், மைக்ரோஃபோன்கள், இயர்ஃபோன்கள் தயாரிப்பில் அசத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான, அந்நிறுவனத்தின் சிஎக்ஸ் 400 பி.டி. ட்ரூ வயர்லெஸ் இயர்ஃபோன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதையடுத்து தற்போது அந்நிறுவனம், 'ஹெச்டி 560 எஸ்' எனும் புதிய ஹெட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.