பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது கேலக்ஸி எம் தொடரில் எம்31 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சாம்சங் மொபைல் வர்த்தக மூத்தத் துணைத் தலைவர் அசிம் வார்சி ஹரியானா மாநிலம் குருகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சாம்சங் கேலக்ஸி எம்31 விவரக் குறிப்புகள்
- 6.4-இன்ச் சூப்பர் AMOLED தொடுதிரை, குவாட்-கேமரா அமைப்பு.
- முதன்மை 64 எம்பி மெயின் லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் குவாட்-கேமரா (5 எம்பி மேக்ரோ, 5 எம்பி டெப்த் லென்ஸ்).
- 32 எம்பி முன் கேமரா (5 எம்பி மேக்ரோ, 5 எம்பி டெப்த் லென்ஸ்).
- எக்ஸினோஸ் 9611 2.3 GHz ஆக்டா கோர் SoC சிப்செட்.
- இன்-பாக்ஸ் வகை சி15 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜர் 6000 எம்ஏஎச் பேட்டரி.