தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

கிருமிகளை 10 நிமிடத்தில் அழிக்கும் சாம்சங் சாதனம் அறிமுகம்! - சாம்சங் நிறுவனம்‌ வெளியிட்டுள்ள அறிக்கை

சியோல்: சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக ஸ்மார்ட்போன்,இயர்பட் உள்ளிட்ட பொருள்களில் உள்ள கிருமி, பாக்டீரியா ஆகியவற்றை 99 விழுக்காடு அழுக்கும் யுவி ஸ்டெர்லைசர்(UV Sterilizer) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங்
சாம்சங்

By

Published : Jul 9, 2020, 11:52 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

உலகளவில் பிரபலமான சாம்சங் நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பயனர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் கிருமி தொடர்பான அச்சம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், இயர்பட் ஆகியவற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சாம்சங் நிறுவனம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்றைய உலகில் தனிப்பட்ட சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், கிருமி, பாக்டீரியாக்களை அழிக்கும் யு.வி ஸ்டெர்லைசர் சாதனத்தை அறிமுகம் செய்கிறோம்.

உங்களது ஸ்மார்ட்போன், இயர்பட், கண்ணாடிகள் ஆகியவற்றை வெறும் 10 நிமிடங்களில் சுத்தம்‌செய்து கிருமிகளை அழித்துவிடும். யு.வி. ஸ்டெர்லைசரில் உள்ள இரட்டை யு.வி. விளக்குகளானது சாதனத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் மேல் மற்றும் கீழ் மேற்பரப்பில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்கின்றன.

சாதனம் 10 நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே அணைக்கப்படும். அதே நேரத்தில்" வயர்லெஸ் முறையில் உங்கள் சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்" என அந்த அறிக்கையில் சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details