தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இந்தியாவில் அறிமுகமான ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் - Launch of Realme X50 Pro 5G in india

டெல்லி: டூயல் செல்ஃபி கேமராக்களுடன் ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி, ஸ்னாப்டிராகன் 865 SoC ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது, விலை, விவரக்குறிப்புகளை உள்ளே காணலாம்.

realme-x50-pro-5g
realme-x50-pro-5g

By

Published : Feb 24, 2020, 6:33 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல் மீ, இன்று தனது புதிய படைப்பான ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 65W சூப்பர் டார்ட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம், இன்-டிஸ்ப்ளே கைரேகை உணர்வி (சென்சார்), இரட்டை செல்ஃபி கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சம்கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 5 ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்போனாகும்.

ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜியின் அம்சங்கள்

  • 6.57 அங்குல முழு ஹெச்.டி. + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவில், 2400 x 1080 பிக்சல்கள்.
  • 90.4 சதவிகித தொடுதிரை, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரஸ் ரேட்.
  • கூடுதல் சேமிப்பகம் கொண்டது, குறைந்தபட்சம் 12 ஜிபி ராம், 256 ஜிபி ரோம் சேமிப்பகம்.
  • 64 எம்பி வசதியுடன் இரண்டு குவாட் டூயல் செல்ஃபி கேமரா.
  • 64 எம்பி மெயின் பேக் கேமராவுடன் 20 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் வசதி, 119 டிகிரி அல்ட்ரா-வைட் பயன், சூப்பர் நைட்ஸ்கேப் 3.0.
    ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல் மீ எக்ஸ் 50 ப்ரோ 5ஜியின் விலை

  • (6 ஜிபி ராம் + 128 ஜிபி நினைவகம்) விலை 37 ஆயிரத்து 999 ரூபாய்.
  • (8 ஜிபி ராம் + 128 ஜிபி நினைவகம்) விலை 39 ஆயிரத்து 999 ரூபாய்.
  • (12 ஜிபி ராம் + 256 ஜிபி நினைவகம்) விலை 44 ஆயிரத்து 999 ரூபாய்.

இந்த மூன்று மாடல்களும் மாலை 6 மணியிலிருந்து பிளிப்கார்ட் (Flipkart) ரியல்மே.காம் (Realme.com) இணையப் பக்கத்தில் பெறலாம்.

இதையும் படிங்க:நிவாரணம் வழங்க முடியாத நிலையில் அரசு - கலக்கத்தில் டெலிகாம் ஆபரேட்டர்கள்!

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details