தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

ஓப்போ ஏ31 ஸ்மார்ட்போன் 11 ஆயிரத்து 490 ரூபாய்க்கு அறிமுகம்

டெல்லி: ஓப்போ நிறுவனத்தின் புதிய ஏ31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

oppo-launches-a31-
oppo-launches-a31-

By

Published : Feb 27, 2020, 7:41 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது புதிய மாடலான ஓப்போ ஏ31 (4 ஜிபி ராம் + 64 ஜிபி ரோம்) வசதி ஸ்மார்ட்போனை 11 ஆயிரத்து 490 ரூபாய்க்கும், 6 ஜிபி ராம் + 128 ஜிபி ரோம் வசதி ஸ்மார்ட்போனை 13 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓப்போ ஏ31 சிறப்பம்சங்கள்

  • ஆக்டா கோர் மீடியாடெக் பி35 சிப்செட் வசதி.
  • ஆண்ட்ராய்ட் 9 ColorOS6.1.2. தொழில்நுட்பம்.
  • 12 எம்பி செயற்கை நுண்ணறிவு (AI) லென்ஸ், 2 எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் அமைக்கப்பட்ட மூன்று முதன்மை கேமரா.
  • 8 எம்பி செயற்கை நுண்ணறிவு (AI) லென்ஸ் முன் கேமரா.
  • 8.3 மிமீ தடிமன், 180 கிராம் எடை, 20:9 விகிதம் தொடுதிரை

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 29 தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது. அதில் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து விற்பனைக்கு வரும். இவற்றை அமேசான், பிளிப்கார்ட், டாடா கிளிக், ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்களில் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details