மக்களிடைய இணைய சேவை அதிகரிக்கத் தொடங்கியதும் உலக செய்திகள் முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்தும் அவர்களது கைகளுக்கு எளிதில் சென்று சேர்ந்தது.
ஆனால், மறுபுறம் போலிச் செய்திகளும் தவறான தகவல்களும் மக்களிடம் செல்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க டெக் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம், தரமான, சிறப்பான முறையில் உருவாக்கப்படும் செய்திகளை மக்களிடையே எடுத்துச் செல்ல புதிய சேவை ஒன்று தொடங்குவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
அதன்படி சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள செய்தி நிறுவனங்களுடன் கூகுள் நிறுவனம் தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் செய்திகளை சிறப்பான முறைகளில் மக்களிடம் எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து கூகுள் ஆராய்ந்து வருகிறது. மேலும், சிறப்பான முறையில் செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு சிறப்பு உரிமம் வழக்குவது குறித்தும் கூகுள் பரிசீலித்து வருகிறது.