எம்ஐ நிறுவனம் கைப்பேசி, தொலைக்காட்சி, கேஜெட்டுகள் என பல்வேறு துறையில் சிறப்பாய் விளங்கி கொண்டிருக்கிறது. தற்போது அடுத்த கண்டுபிடிப்பாக "எம்ஐ பியர்ட் டிரிம்மர்" (MI Beard trimmer) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிநபர் உபயோகிக்கும் பிரிவில் சியோமி இந்தியா அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பாகும்.
ETV Bharat / science-and-technology
"தாமாகவே தாடி டிரிம் செய்யும் எம்ஐயின் அடுத்த கண்டுபிடிப்பு அறிமுகம்" - mi.com
எம்ஐ நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக "எம்ஐ பியர்ட் டிரிம்மர்" (MI Beard trimmer) என்ற தயாரிப்பு பல்வேறு சிறப்பு அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது.
இதில், இரண்டு சீப்புகள் உள்ளிட்ட 40 வகையான தாடி டிரிம் செய்யும் வசதிகள் உள்ளன. எனவே தாமாகவே வித்தியாசமான தாடி அமைப்புகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் டிரிம்மரில் நீர் புகாமல் இருக்க வசதி உள்ளதால், நாம் டிரிம்மரை தண்ணீரால் சுத்தம் செய்தாலும் பாதிப்பு ஏற்படாது. இந்த டிரிம்மரை ஒரு முறை முழு சார்ஜ் செய்தாலே 90 நிமிடங்கள் உபயோகிக்கலாம்.
தற்போது "எம்ஐ பியர்ட் டிரிம்மர்" முன்பதிவு எம்ஐ தளத்தில் நடைபெற்று வருகிறது.இதன் விலையாக ரூபாய் 1,199 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 27ஆம் தேதி முதல் அமேசான், எம்ஐ ஹோம்ஸ், எம்ஐ தளம் உள்ளிட்டவற்றில் நள்ளிரவு 12 மணிக்கு விற்பனை தொடங்க உள்ளது.