சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் குப்பைகளில் நுண்ணுயிர்கள் வளர்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். விண்வெளியிலும் கூட இந்த நுண்ணுயிர்களால் எப்படி வளர முடிகிறது என்று ஆச்சரியத்தை இவை ஏற்படுத்தியது.
ETV Bharat / science-and-technology
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா வளர்ப்பு - நாசா விஞ்ஞானிகள் சாதனை - நாசா
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குப்பைகளில் நுண்ணுயிர்கள் வளர்ந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் விண்வெளியிலேயே மருந்துகள் தயாரிப்பது சாத்தியம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்படி விண்வெளி நிலையத்தின் ஜன்னல்கள், கழிவறைகள், பயிற்சிக் கூடங்கள், உணவு மேஜைகளில் என்று வேறு வேறு தட்பவெட்ப நிலைகளிலும் வளர்ந்திருந்த பூஞ்சை முதலிய நுண்கிருமிகளை ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு எடுத்து வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி குறித்து பேசிய இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர், கஸ்தூரி விஸ்வநாதன், இது மகத்தான நுண்ணுயிர் ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை தந்துள்ளது.
இதன் மூலம், விண்வெளியில் மருந்து பயன்பாட்டுக்காக நுண்ணுயிர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.