பெர்லின் (ஜெர்மனி): ஆல்டெர்கோ ரோபாட்டிக்ஸின் புதிய ஷெல்லி ஸ்மார்ட் நகர்வு உணரிகள் 200 மில்லி விநாடிகளுக்குள் பதிலளித்து, விளக்குகளை இயக்கி, கைபேசிகளுக்கு அதன் அறிவிப்புகளை அனுப்பும் திறன்கொண்டது.
ETV Bharat / science-and-technology
IFA Berlin 2020: 200 மில்லி விநாடிகளில் பதிலளிக்கும் சென்சார் கருவி - சென்சார் கருவி
பல்கேரிய இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) நிறுவனமான ஆல்டெர்கோ ரோபாட்டிக்ஸ், பெர்லினில் நடந்த ஐஎஃப்ஏ மின்னணு சாதனங்கள் கண்காட்சியில் புதிய ஸ்மார்ட் நகர்வை உணரும் (மோஷன் சென்சார்) கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நீண்ட, ஒரு வருட மின்கல சேமிப்பு ஆயுளையும் கொண்டுள்ளது. இதுவரை சந்தையில் புழக்கத்திலுள்ள உணரிகளை ஒப்பிடுகையில், இது திறன்வாய்ந்த, புத்திசாலியான உணரும் கருவி என்று நிறுவன தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு இந்த கருவியில் செறிவூட்டப்பட்டுள்ளது. பயனாளர்களில் கட்டளைகளுக்கு வெறும் 200 மில்லி விநாடிகளில் இந்த கருவி செயல்படுகிறது. சந்தையில் உள்ள உணரிகளை காட்டிலும் இது அதிவேக திறன் கொண்டதாக கருதப்படுகிறது.