ஹுவாவே மேட் எக்ஸ் திறன்பேசி இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த திறன்பேசி இந்தியாவில் வெளியாகலாம் என்று இதன் அலுவலர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஹுவாவே மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 8" அகண்ட மடக்குத் திரை
- கிரின் 980 (Kirin 980), பாலாங் 5000 (Balong 5000) சிப்செட் இந்த திறன்பேசியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) உதவி இருப்பதால் நிச்சயம் ஒரு ஜிபி படத்தினை கூட வெறும் மூன்று நொடிகளில் பதிவிறக்கம் செய்துவிடலாம்.
- லெய்கா (Leica) படக்கருவி நிறுவனத்துடன் இணைந்து இதன் துல்லிய புகைப்படக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
- அதிவிரைவு மின்னூக்கி (Fast Charging)
- பக்கவாட்டில் அமைந்திருக்கும் அதிவேக கைரேகை பொத்தான்
- 4500 எம்.ஏ.ஹெச். மின்கலன் (Battery) பொருத்தப்பட்டுள்ளது
ஐரோப்பாவில் இவ்வருடத்தின் மத்தியில் வெளியாக உள்ளது இந்த திறன்பேசி. இதன் விலை 2,299 யூரோக்களாகும்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் திறன்பேசியின் விலையை விட இதன் விலை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.