தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

குட்டீஸ் உடல்நிலையைக் கண்காணிக்கும் கலர்புல் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்! - கலர்புல் ஸ்மார்ட் வாட்ச்

GOQii நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ஸ்மார்ட் வைட்டல் ஜூனியர்' ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

smartwatch
GOQii

By

Published : Jun 5, 2021, 1:37 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்த இரண்டாம் அலையில், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, குழந்தைகளின் உடல்நிலை அவ்வப்போது பரிசோதனை செய்யும் கடமை பெற்றோருக்கு உள்ளது.

அதனை எளிதாக்க, டெக் பிரிவில் சுகாதார பிராண்டாக வலம்வரும் 'GOQii' நிறுவனம், குழந்தைகளுக்காக 'ஸ்மார்ட் வைட்டல் ஜூனியர்' (Smart Vital Junior)ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலையாக நான்காயிரத்து 999 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட் வாட்ச் குழந்தைகளைக் கவரும் வகையில், வண்ணமயமான டிஸ்பிளே, ஸ்ட்ரேப் கொண்டுள்ளது. மேலும், சிறுவர்களின் சருமத்திற்கு ஏற்றவாறு மென்மையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலையைக் கண்காணிக்கலாம்

இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ரத்த ஆக்ஸிஜன் அளவுகள், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை அளவு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிகிறது.

இது குறித்து GOQii ஸ்மார்ட் ஹெல்த்கேர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் விஷால் கோண்டல் கூறுகையில், "தொற்றுநோய் காலகட்டம் குழந்தைகளின் வாழ்க்கை முறையைப் பெரிதும் சவலாக மாற்றியுள்ளது.

குழந்தைகளின் உடல்நிலையைக் கண்காணிப்பது அவசியமாக தற்போது மாறிவி்ட்டது. பெற்றோர்கள், GOQii செயலி மூலம் குழந்தைகளின் உடல்நிலையைத் துல்லியமாகக் கண்காணிக்கலாம்" எனத் தெரிவித்தார்.

'ஸ்மார்ட் வைட்டல் ஜூனியர்' ஸ்மார்ட்வாட்ச்

மெமரி கேம்ஸ்

மேலும், குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கில் பல மெமரி கேம்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

இந்த கிட்ஸ் ஸ்மார்ட் வாட்சை, GOQii தளத்திலும், அமேசான், பிளிப்கார்ட் தளத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details