சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானுக்கு இந்தியாவில் பிளிப்கார்ட் கடும் போட்டியை அளித்துவருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க அமேசான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், அமேசான் தனது ஸ்மார்ட் ஸ்பீக்கராக அலெக்ஸாவில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குரல் பயன்படுத்தவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, அமேசான் தளத்தில் இருக்கும் Amitabh Bachchan voice experience என்பதை வாங்கினால், இவ்வசதியை அமேசான் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.