கலிபோர்னியா : ஆப்பிள் தயாரிப்புகள் வெளியீட்டு நிகழ்வில் ஸ்மார்ட் ஒலிப்பெருக்கியான ஹோம் பாட் மினியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஒலிப்பெருக்கி, 360 டிகிரி அலைவரிசையை வழங்குகிறது. ஹோம் பாட் மினி ஆப்பிளின் எஸ் 5 சிப்பால் இயக்கப்படுகிறது. ஏர்ப்ளே 2 மல்டி-ரூம் திறன்களையும் இந்த ஹோம் பாட் மினி ஆதரிக்கிறது. இதன்மூலம் பல ஒலிபெருக்கிகளை இதில் இணைத்துக் கொள்ளலாம். கிண்ன வடிவிலான இதன் தோற்றம், மெஷ் துணியால் பாதுகாக்கப்பட்டுள்ளது.