அமெரிக்காவின் வோக்ஸ் மீடியாவால் நடத்தப்படும் தொழில்நுட்ப செய்தி வலைத்தளமான வெர்ஜ், கட்டுரைகள் அல்லது டிஜிட்டல் ஆடியோ கோப்புகளின் உள்ளடக்கங்களைப் படிக்கும்போது மிகவும் இயல்பானதாக, நீண்ட வடிவில் தொடர்ந்து கேட்கும் வாசிப்புக் குரலைக் கேட்க விரும்பும் பயனாளர்களுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிநுட்ப உருவாக்குநர்கள் (developers) இதனை வடிமைத்துள்ளதாக கூறுகிறது.
இது குறித்து அமேசான் நிறுவனம் கூறுகையில், “ஆழ்ந்த கற்றலுக்கு உதவும் நீண்ட வடிவிலான மாதிரியால் இந்த புது பாணி இயங்கும். மேலும், அமேசான் அலெக்ஸா-குரல் சாதனங்களை மிகவும் இயல்பான உரையாடலுக்கு வழிவகை செய்கிறது. அதாவது, இடைநிறுத்தங்களுடன் பேச அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு செய்தி, இசை உள்ளடக்கங்களுக்கான புதிய வடிவிலான பேசும் பாணிகளை வெளியிட்டது. மீண்டும் அதனை கடந்த நவம்பர் மாதம் புதுப்பித்து வெளியிட்டது. அதனை தற்போது இன்னும் நவீனப்படுத்தி இருக்கிறோம்”என்கிறது.
உரையை இயல்பான வகையில் உயிரோட்டமான உரைநடையாக வெளிப்படும் ‘அமேசான் பாலி ’சேவையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேச்சு பாணிகளான மத்தேயு, ஜோனா ஆகிய இரு குரல் வகைகளை முற்றிலும் புதுமையாக இன்னும் மேம்படுத்தி இருக்கிறது.