இன்றைய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட் டெக்னாலஜிகளின் ராஜ்ஜியம் பெருமளவில் நடந்து வருகிறது. காலை எழுந்ததும் கையில் எடுக்கும் ஸ்மார்ட்போனை, இரவு படுக்கைக்கு சென்றாலும் தள்ளி வைப்பதற்கு மனது வராது. அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன் மாறியுள்ளது. அதேபோல, பயனர்களின் தினசரி வாழ்க்கையில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பயன்பாடும் அதிகளவில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உதவி வருகிறது வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜெட்களான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்.
பல நிறுவனங்களின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையில் விற்பனைக்கு இருந்தாலும், அமேசானின் 'அலெக்சா'வுக்கு என அதில் தனி இடம் மக்களிடம் உண்டு. 'அலெக்சா' இந்திய சந்தையில் அறிமுகமாகி மூன்றாடுகள் நிறைவடைந்திருந்தாலும், அதன் மவுசு தற்போது வரை குறையவில்லை. தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி என சகல மொழிகளிலும் பேசி 'அலெக்சா'அசத்தி வருகிறது.