ஹைதராபாத்:2020ஆம் ஆண்டு வெளியான திறன்வாய்ந்த ஐந்து சிறந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் குறித்து அறிந்துகொள்வோம்.
கரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிபோயிருந்தனர். இச்சூழலில் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற தகவல் சாதனங்களில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களும் ஒன்று. ஆம், நமக்கான உதவியாளர் போல செயல்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாக, 2020ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டை விட 87 விழுக்காடு மடங்கு மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் சந்தை வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் அனைத்து அமேசான், ஆப்பிள், கூகுள் நிறுவனங்களைத் தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உற்பத்தி செய்வதில் முனைப்புக் காட்டிவருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் சிறந்த ஐந்தினை குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
அமேசான் எக்கோ ஷோ 5:
அமேசான் எக்கோ ஷோ 5 இந்தியாவில் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அலெக்ஸா உள்ளீடு, 5.5 அங்குல தொடுதிரை, 1எம்பி கேமரா, 720 எச்டி தெளிவிலான காணொலி பதிவு, அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற செயலிகள் உடன் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ஒலிப்பெருக்கி, 360 டிகிரி அலைவரிசையை வழங்குகிறது. ஹோம் பாட் மினி ஆப்பிளின் எஸ் 5 சிப்பால் இயக்கப்படுகிறது. ஏர்ப்ளே 2 மல்டி-ரூம் திறன்களையும் இந்த ஹோம் பாட் மினி ஆதரிக்கிறது. இதன்மூலம் பல ஒலிபெருக்கிகளை இதில் இணைத்துக் கொள்ளலாம். கிண்ன வடிவிலான இதன் தோற்றம், மெஷ் துணியால் பாதுகாக்கப்பட்டுள்ளது.