டெல்லி:இதுகுறித்து சர்வதேச மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், "உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டில் 33 பாக்டீரியாக்களால் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இ.கோலி, எஸ். நிமோனியா, கே. நிமோனியா, எஸ். ஆரியஸ் மற்றும் ஏ. பௌமனீ ஆகிய 5 வகையான பாக்டீரியாக்களால் மட்டுமே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாக்டீரியாக்களின் தாக்கம் புவியியல் மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடுறது. இந்த பாக்டீரியாக்களால் இந்தியாவில் மட்டும் 6,78,846 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1,57,082 லட்சம் பேர் இ.கோலி பாக்டீரியாவால் மட்டும் உயிரிழந்துள்ளனர். உலகளவில் உயிரிழப்புகள் இதய நோய்க்கு அடுத்தபடியாக பாக்டீரியாக்களால் மட்டுமே பதிவாகின்றன.
இந்த பாதிப்புகள் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை அறிவுறுத்துகிறது. அதேபோல அதிக நோயறிதல் ஆய்வகங்கள், சுகாதார திட்டங்கள், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஆன்டிபயாடிக் முறைகளை பின்பற்றல் உள்ளிட்டவையை மக்கள் பின்பற்ற தேவையான நடவடிக்கையை அரசுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகையில், காசநோய், மலேரியா, எச்.ஐ.வி போன்ற நோய்க்கிருமிகளின் தாக்க மதிப்பீடுகள் நம்மிடம் உள்ளன.
ஆனால், பாக்டீரியாக்களை பொருத்தவரை தாக்க மதிப்பீடுகள் குறைவாகவே உள்ளன. 2019ஆம் ஆண்டு எச்.ஐ.வி/எய்ட்ஸ் காரணமாக 8,64,000 உயிரிழப்புகள் நடந்துள்ளன. இந்த உயிரிழப்புகள் ஏற்படக்கூடியவை அல்லது மருத்துகளால் நீட்டிக்கப்படக்கூடியவை என்பது மருத்துவர்களுக்கு தெரிந்ததே. மாறாக பாக்டீரியாக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மதிப்பீடு செய்வதும்கண்டறியவதும் ஆராய்ச்சிகளால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இந்த பாக்டீரியாக்களின் தாக்கம் புவியியல் ரீதியாக மாறுபடுவதால் உலகளாவிய ஆராய்ச்சிகள் தேவைப்படும். அது மிகப்பெரிய செயலாக்கமாக இருக்கும். ஆனால் சுகாதார நடவடிக்கைகள் பொதுவானவையே. அதனை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும்.
மொத்தமாக 204 நாடுகளில் அனைத்து வயது மற்றும் பாலினம் அடிப்படையில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. சுமார் 343 மில்லியன் பதிவுகள் மற்றும் நோய்க்கிருமி தாக்கங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் 33 பாக்டீரியாக்கள் மட்டுமே உயிர்க்கொல்லியாக உள்ளன. அதில் இ.கோலி, எஸ். நிமோனியா, கே. நிமோனியா, எஸ். ஆரியஸ் மற்றும் ஏ. பௌமனீ பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்த வேண்டியவை. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நாடுகளில் 1,00,000 பேருக்கு 52 உயிரிழப்புகள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மொத்த உயிரிழப்புகளில் 9.4 லட்சம் பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் உயிரிழப்புகள் 9,000ஆக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு - ஆண்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?