தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவினம் 850 கோடி டாலரை எட்டும் - ஐடிசி - செயற்கை நுண்ணறிவு

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவினம் 2026ஆம் ஆண்டுக்குள் 850 கோடி டாலரை எட்டும் என்று சர்வதேச தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவு 850 கோடி டாலரை எட்டும்
இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவு 850 கோடி டாலரை எட்டும்

By

Published : Dec 6, 2022, 3:28 PM IST

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவினம் குறித்து சர்வதேச தரவு நிறுவனம் (IDC) வெளியிட்டுள்ள ஆய்வுக்குறிப்பில், இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த டிஜிட்டல் மாற்றத்திற்கான தேவை அதிகரித்துவருகிறது. இந்த டிஜிட்டல் மாற்றம் மூலம் வாடிக்கையாளரின் அனுபவமும், பயன்பாடும் மேம்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் கிளவுட், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, நெட்வொர்க் உள்கட்டமைப்பு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களை செயல்படுத்த முனைப்பு காட்டிவருகின்றன. ஏற்கனவே, இந்திய தொழில்நுட்பக நிறுவனங்கள் கரோனா ஊரடங்கு காலங்களில் வியாபார போட்டியை தக்க வைக்க ரிமோட் ஒர்க்கிங் காரணத்திற்காக புதிய டிஜிட்டல் மயமாக்கல் செலவினங்களை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.

அதன்மூலம் லாபமும் அதிகரித்திருக்கிறது. மக்களும் டிஜிட்டல் மாற்ற செயல்பாடுகளுடன் இணைந்து பரிணமிக்க தொடங்கிவிட்டனர். இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கான செலவினங்கள் வருங்காலத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை எட்டும். இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான செலவினம் 2026ஆம் ஆண்டுக்குள் 850 கோடி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், பணவீக்கம், உலகளாவிய புவிசார் அரசியலில் சிக்கல்கள் உள்ளிட்டவையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆகவே, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கூறிய காரணிகளையும் டிஜிட்டல் மாற்றத்தை செயல்படுத்தும் முனைப்பில் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2022ஆம் ஆண்டின் டாப் மோஸ்ட் ஆப், கேம்?

ABOUT THE AUTHOR

...view details