தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

2023-இல் கொடிகட்டி பறந்த செயற்கை நுண்ணறிவு.. வளர்ச்சியும் எழுச்சியும்!

Rise of AI: 2023 இல் தொழிநுட்ப உலகையையே கலக்கிய செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

2023இல் கொடிகட்டி பறந்த செயற்கை நுண்ணறிவு.
2023இல் கொடிகட்டி பறந்த செயற்கை நுண்ணறிவு.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 5:26 PM IST

சென்னை: கடந்த பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கடந்த 12 மாதங்களில் அதாவது 2023இல் செயற்கை நுண்ணறிவு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது.

ஏஐ - யின் தொடக்கம்: 1950களில் ஜான் மெக்கார்த்தி என்ற விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை உருவாக்கினார். இதனை அடுத்து, 1956இல் அதிகாரப்பூர்வமாக செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டது. 1960-இல் எலிசா என்ற சாட்பாட் மூலம் ரோபோ ஷேக்கியைத் தொடர்ந்து, 1970 முதல் 1980களுக்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

1990களில் வீடியோ மற்றும் பேச்சு செயலாக்கம் முன்னுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2000களில் முகம் அடையாளம் காணும் முறை (facial recognition), உதவியாளர்கள் (personal assistants), தானியங்கி வாகனம் (autonomous vehicles), பட உருவாக்கம் போன்றவை வந்தன. கடந்த ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு பெற்ற வளர்ச்சியை விட, 2023-இல், செயற்கை நுண்ணறிவு மிகவும் மேம்படுத்தப்பட்டதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது.

2023-இல் ஏஐ:கடந்த ஆண்டுகளில் சில துறைகளில் மட்டுமே தடம் பதித்திருந்த செயற்கை நுண்ணறிவு, 2023இல் எல்லா துறைகளிலும் தடம் பதித்து, மனித குலத்தையே நடுங்கச் செய்தது. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பங்களிப்புடன் ஏஐ எழுச்சி பெற்றது.

2022ஆம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை (Chat Gpt) அறிமுகம் செய்தபின், 2023-இல் சாட் ஜிபிடி மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. இது மட்டுமல்லாமல், அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் செயலி வடிவில் வந்தது.

இதற்கு போட்டியாக, கூகுள் நிறுவனம் பார்ட் (Bard), ஜெமினி (Gemini) போன்ற சாட்போட்டையும், கோரா (Quoro) நிறுவனம் போ என்ற சாட்போட்டையும் அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங்க் (Bing) என்ற தேடு இயந்திரத்தையும் கொண்டு வந்தது.

இது மட்டுமல்லாமல், ஆபிஸ் (MS Office) மென்பொருள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ் அப், மெஸஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மேலும் கூகுள் நிறுவனம் வீடியோ உருவாக்கும் வகையில் யூடியூப்பிலும், செயற்கை நுண்ணறிவு சேவையை கொண்டு வந்தது. மேலும் எலான் மஸ்க்கின் xAi நிறுவனம் Grok என்ற சாட்பாட்டையும் கொண்டு வந்தது.

  • நோய் கண்டறிதல், மருந்து கண்டுபிடிப்புகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தியது. pathAI போன்றவை புற்றுநோய் கண்டறிதல் விகிதங்களை உயர்த்தியது. Atomwise சிகிச்சை குறித்த அடையாளத்தை துரிதப்படுத்தியது.
  • மேலும், செயற்கை நுண்ணறிவு காரணமாக டெஸ்லா மற்றும் வோமோவின் தன்னியக்க வாகனங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டன.

இதையும் படிங்க:அமெரிக்காவில் ஆப்பிள் பொருட்களுக்கு தடை? காப்புரிமை சிக்கலில் சிக்கியதா ஆப்பிள்? அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details