ஹைதராபாத்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய சீறிப்பாய்ந்த சந்திராயன்-3 விண்கலம் புவியின் நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) அறிவித்துள்ளது. இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.
இந்தியாவிடம் மொத்தம் 4 வகையிலான செயற்கைகோள் ஏவுதள வாகனங்கள் உள்ளன. அவை PSLV(Polar satelite launch vechile), GSLV(geosynchronous satellite launch vechile), LVM MK-III(), SSLV(small satellite launch vechile).
1. PSLV-யின் பயன்பாடு: நான்கு வகையிலான ஏவுதளங்களை கொண்டது. முதலில் அடிமட்டத்தில் திட எரிபொருள் நிலையிலும், இரண்டாவதாக திரவ எரிபொருள் நிலையிலும், மூன்றாவதாக திட எரிபொருள் நிலை, கடைசி நிலையான நான்காவது நிலையில் திரவ உந்துசத்தி நிரப்பி வெளிப்புற அழுத்தம் கொடுக்குப்பதற்கு பயன்படுகிறது.
PSLV-யின் முழு திறன்:GTO(Geosynchronous transfer orbit) - 1050 கிலோ கிராம், Polar sun syncgronous orbit - 1600 கிலோ கிராம்
SSLV(small satellite launch vechile) பயன்பாடு:உலகளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள் செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று வகையிலான ஏவுதளங்களில், LEO(low earth orbit)-லிருந்து 500 கிலோ கிராமுக்குள் 500 கி.மீ கொண்ட திட எரிபொருள் நிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
GSLV - பயன்பாடு:PSLV-யிலிருந்து வேறுபட்டு, கிரையோஜெனிக் மேல்நிலையைப் பயன்படுத்தி, 2 டன் அளவிலான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவதளங்களுடன் உட்படுத்தப்படுகிறது. முதல் நிலையில் திரவ ராக்கெட் மோட்டார் என்ஜினுடன் இணைக்கப்பட்டு, இரண்டாவதாக விக்காஸா என்கின்ற திரவ ராக்கெட் என்ஜின் பொருத்தப்பட்டு, மூன்றாம் நிலையாக கிரையோஜெனிக் இயந்திரம் (திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் GSLV-யில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
LVM (or) GSLV MK-III பயன்பாடு:கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள், பல்நோக்கு திறன்கொண்ட கனமான செயற்கைகோள்கள், எதிர்காலங்களில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் குழு பணிகளை தொடங்குவதற்கு பயனில் இருந்து வருகிறது. அதன் உயரம் 43.5 மீட்டர், ஏவுதளத்தின் டயாமீட்டர் 4.0 மீட்டர், ஹீட் ஷீல்ட்(HEAT SHIELD): 5.0 மீட்டர் (டயாமீட்டர்), ஏவுதளத்தில் நிலைகள் - 3, எடை - 640 டன் ஆகும்.
LVM MK-III - PAYLOAD CAPACITY:
- GTO(Geo Synchronous Transfer Orbit) : 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்த சுமந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- LEO( Low Earth Orbit): 10 டன் எடை கொண்ட செயற்கைகோள்களை, 600 கிமீ கடல் மட்டத்திலிருந்து செலுத்தும் வகையில் வல்லமைப்பெற்றுள்ளது.
LANDER(லேண்டர்):