தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

கட்டண சேவை சோதனையை இந்தியாவில் செய்யும் கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் சார்பாக 'டாஸ்க் மேட்' எனப்படும் கட்டண சேவை சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

google-is-testing-a-paid-crowdsourcing-service-task-mate-in-india
google-is-testing-a-paid-crowdsourcing-service-task-mate-in-india

By

Published : Nov 24, 2020, 5:57 AM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

கூகுள் தனது மேப்பிங் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிகமான வணிகங்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக, கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் டாஸ்க் மேட் எனப்படும் கட்டண (crowdsourcing) சேவை சோதனை செய்துவருகிறது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவும் என தெரிகிறது. டாஸ்க் மேட்டின் மூலம் மக்கள் தங்கள் அருகிலுள்ள பணிகளைக் கண்டுபிடிக்கவும், சம்பாதிக்கத் தொடங்கவும், ஒரு பணியை முடிக்கவும் உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண சேவை சோதனையை இந்தியாவில் செய்யும் கூகுள் நிறுவனம்

இதன் பீட்டா (beta) சோதனை கட்டத்தில், டாஸ்க் மேட் சேவையை தற்போது ஒரு பரிந்துரை குறியீடு முறை மூலம் "தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனையாளர்களுக்கு மட்டுமே" என்று கூகுள் தெரிவித்துள்ளது.

  • டாஸ்க் மேட் மூலம் அருகிலுள்ள வேலைகளை கண்டுபிடிக்கவும், வேலைகள் மூலம் சம்பாதிக்கவும் பயன்படுத்த முடியும். அதேபோல் மின் கணக்கை பதிவு செய்வதன் மூலமோ அல்லது பயன்பாட்டு கட்டண கூட்டாளரிடமோ செய்யப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை முடித்த பின், கேஷ் அவுட் என்னும் பட்டனை தட்டினால்தான் உழைத்ததற்கான பணத்தினை பெற்றுக் கொள்ளமுடியும்.
  • அதேபோல் அந்தப் பணி என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். எளிய பணி, அமர்ந்து செய்யும் பணி, களத்தில் வேலை செய்யும் பணி என பிரிக்கப்பட்டிருக்கும்.
  • களத்தில் நாம் வேலை பார்த்தோம் என்றால் அருகிலுள்ள உணவகங்களுக்கு முன்னதாக புகைப்படம் எடுத்து, மேப்பிங் செய்ய வேண்டும் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த டாஸ்க் மேட் பற்றி கூகுள் நிறுவனம் சார்பாக இதுவரை எவ்வித அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனிமையை உணரும் ”பூந்தொட்டி” தாவரங்கள் : ஆச்சரியம் அளிக்கும் ஆய்வுத் தகவல்

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details